Monday, December 20, 2010

பேரன்பு கொண்ட .........களே

தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்க அன்னையார் உத்தரவு காங்கிரஸ் கட்சிக்கென்று சில இடம் கூட்டணிகளின் ஆதரவோடு சில இடம் இப்படியான திட்டங்களுடன் களத்தில் இறங்க நினைக்கிறது தலைமை .
அன்னையார் அழைக்கிறார் என்றால் அலைமோதுமே       கூட்டம்  

இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த  ஐந்து வருடங்களாக  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்த பட்டது , கொன்று குவித்தது  அதற்க்கு நம்மக்கள் பலமுறை முறையிட்டும் சிறிதும் செவி சைக்கதவர் தான் நம் அன்னையார்

 எம் தமிழ் மக்களை அழித்திட இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளித்து , ஆயுத உதவி செய்து புலிகளோடு பொது மக்களையும் கொன்று குவிக்க திட்டம் தீட்டியவர் நம் அன்னையார்

ஈராக்கில் இறந்தோர்க்கு உதவ மருத்துவர் குழு ,மருந்து பொருட்கள், 100 கோடி பண உதவி  எம் தமிழர்க்கு எதிராக மட்டும் ஆயுத உதவி

அப்பழுக்கில்லா தமிழனை வீட்டிற்கு  அனுப்பிவிட்டு , பணிபுரிந்த
தொழிர்சாலையில் ஊழல் , குடும்பத்தினர் பெயரில் ஏராளமான சொத்து குவித்த  வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்மணியை குடியரசு தலைவராக்கியவர் நம் அன்னையார்
 ......................
இவ்வளவும் செய்துவிட்டு எந்த துணிச்சலில் ஒட்டு கேட்க வருகிறார்
வடைக்கும் பஜ்ஜிக்கும் , குவாட்டருக்கும் , ஒரு நாள் செலவுக்கும் ,வேட்டிக்கும் புடவைக்கும் ஒட்டு போடுவான் தமிழன் என்ற என்னமா

Wednesday, December 15, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே

கே:  அய்யா  தங்கல் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் எந்த அளவு முன்னேறி உள்ளது

 ப : படத்தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி, தொலைக்காட்சி நிறுவனங்களில் , ரியல் எஸ்டேட் தொழில் , பத்திரிகை ,ஜவுளி துறையில் , சிறு  தொழில் நிறுவனங்களில் , மத்திய அமைச்சரவை பதவியில், பொருளாதரத்தில் முன்னேற்றம் எப்படி பல வழிகளிலும் முன்னேற்ற காணப்படுகிறதே

கே : அய்யா இதெல்லாம் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத்தான்  நிகழ்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறதே
    
 ப : என் குடும்பம்  வேறு தமிழ்நாடு வேறா நான் பிர்த்து பார்பவனில்லை அதனால் தான் குடும்ப தலைவன் என்பதை மாற்றி தமிழின தலைவர் என வைத்துக்கொண்டேன்

 இதை தான்  எல்லா பேருந்துகளிலும் ஓட்ட வைதிருபெனே படித்ததில்லையா

 நான் நீ என்று சொல்லும் பொது உதடுகள் ஒட்டாது  நாம்  என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்

Monday, December 13, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே

கே : அய்யா தங்களை பற்றி
 ப :முத்தமிழ் அறிஞன் நான்
     மூவர்க்கு மட்டும் கணவன் நான்

    முனைவர் பட்டம் உண்டெனக்கு
    பெயர்காரனமும்  உண்டதற்கு    

ஓரளவு மனைவிமார்கள் இருந்தாலும்
ஊரெங்கும்  பிள்ளை குட்டிகள்  பெற்றதற்காம்



மும்முறை ஆட்சி செய்தாலே முழி பிதுங்கும் சிலர்க்கு
 ஐந்து முறை ஆட்சிக்கு வந்தும்
 ஆசை அடங்கவில்லை எனக்கு

............

தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில்
 தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக தான்
 மிதப்பேன்......................... ஓய்ந்து  விடமாட்டேன் .(?)
 ஏனென்றால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டிஉள்ளது

 
..............................................................................

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
 ஒன்றே எங்கள் குளம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
வழுக்கை தலையன் ஒருவன் தான் என்போம் !..........


 இதன் தொடர்ச்சி நாளை
 என்னிடம் கேள்விகளை நீங்களும் கேக்கலாம்